இந்தச் சிறுகதைகள். சாதி, மதம், மொழி முதலிய பேதங்களைக் கடந்தவர்கள், எல்லா உயிரினங்களையும் அணைத்துக்கொண்டு வாழ்பவர்கள், எவர் துன்பம் உற்றாலும் எளிதில் கண்கலங்கி விடுபவர்கள், எப்போதும் எல்லார்க்கும் எந்த வேறுபாடுமின்றி ஓடோடி வந்து உதவுபவர்கள் என உன்னதமானவர்கள் பலரும் இந்தக் கதைகளெங்கும் உலா வருகிறார்கள். இந்தக் கதைகளைப் படிப்பவர்கள் யாவருக்கும் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாம் வாழவேண்டும் அல்லது இப்படிப்பட்ட மனிதர்களாக வாழவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி. உதாரணத்திற்கென்று இத் தொகுப்பின் ஒரு கதையையோ ஒரு கதைமாந்தரையோ சுட்டிக்காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. சிறுகதை ஒவ்வொன்றையும் படிக்கிற வாசகர்கள் அதன் உன்னதத்தை உணர்வார்கள்.