購物比價找書網找車網
FindBook
排序:
 
 有 1 項符合

Naveena Alexander

的圖書
圖書介紹 - 資料來源:樂天KOBO   評分:
圖書名稱:பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது

பிடல் காஸ்டிரோ குறித்த இந்தப் புத்தகம் முழுக்கப் முழுக்க பிடலே தனது வாழ்கை குறித்துச் சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து  எழுதப்பட்டது. தனது இளமை பருவம் குறித்தும், பள்ளிப் பருவம் குறித்தும், மாணவப் பருவம் குறித்தும், புரட்சிகரப் போராட்டங்கள் குறித்தும் அவரே நினைவு கூர்ந்த விசயங்களே இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன. ஆகப் பிடல் குறித்த இந்தப் புத்தகம் நம்பகமானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

 

எதற்கு எடுத்த எடுப்பில் புத்தகத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பேசவேண்டும்? பிடல் காஸ்டிரோவின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்துப் பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சனையே. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் தங்களின் சித்தாந்த நம்பிக்கையின் பின் புலத்திலிருந்து பிடலின் வாழ்க்கையை அணுகியிருப்பதால் அவர்களின் புத்தகங்கள் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பிடல் காஸ்டிரோவை நமக்கு முன் நிறுத்துகின்றன. வலதுசாரி சிந்தனைகொண்ட அமெரிக்க எழுத்தாளர்களின் பிடல் குறித்த புத்தகங்கள் அனைத்தும் அவரை ஒரு சர்வாதிகாரியைப் போலவே சித்தரிப்பதிலிருந்து தவறுவது இல்லை. அது அவர்களுடைய கருத்து. அதை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமையும் உண்டு.

 

ஆனால் பிடல் காஸ்டிரோ குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒருவர் அத்தகைய கருத்துகள் கொண்ட புத்தகங்களைப் படிக்கின்றபோது அவர்கள் பிடல் குறித்து மனதிற்குள் எடுக்கும் முடிவு ஒருதலை பட்சமானதாகவே இருக்கும். அப்படியான ஒரு தவறான முடிவிற்கு ஒரு வாசகனை நெட்டி தள்ளுவது வாசிப்பு பழக்கத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அப்படியான ஒரு துரோகத்தை இந்தப் புத்தகம் செய்யாது என்பது உறுதி. இந்தப் புத்தகத்தில் பிடல் காஸ்டிரோவை பிடல் காஸ்டிரோவாக நீங்கள் பார்க்கலாம்.

 

இந்தப் புத்தகம் பெரிதும் அவர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி அவரே பேசியவைகளில் இருந்து கட்டமைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை எழுதப் பெரும் உதவியாக இருந்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று இக்னேஷியோ ரமோனே எழுதிய My Life Fidel Castro மற்றொன்று லேய்செஸ்டர் கால்ட்மன் எழுதிய The Real Fidel Castro.

 

காவியங்களின் காலம் மாத்திரமே உன்னதமான தலைவர்களின், புரட்சியாளர்களின், வீரர்களின், வரலாற்றைப் புரட்டிப்போட்ட நாயகர்களின்  காலமாக இருக்கும் என்று நினைப்போமேயானால் காவியங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கக் கூடும். காவியங்களுக்காக வேண்டி இவர்கள் மண்ணில் பிறப்பது கிடையாது. காவியங்கள் வேண்டுமானால் இவர்களுக்காகப் பிறப்பு எடுக்கலாம். தலைவனாகவும் நாயகனாகவும் இவர்களைக் காவியங்கள் தங்களுக்குள் வரித்துக்கொள்கின்றன.

贊助商廣告
 
博客來 - 今日66折
岩井俊雄創意樂園:100層樓的家
作者:岩井俊雄
出版社:小魯文化
出版日期:2022-08-01
66折: $ 1062 
金石堂 - 今日66折
個人與群體事件的本質﹝第3輯﹞
作者:許添盛
出版社:賽斯文化
出版日期:2007-10-01
66折: $ 581 
金石堂 - 今日66折
賽斯速成100有聲書第4輯
作者:王怡仁
出版社:賽斯文化
出版日期:2017-12-01
66折: $ 792 
金石堂 - 今日66折
健康之道有聲第4輯﹝2015年新版﹞
作者:許添盛醫師主講
出版社:賽斯文化
出版日期:2015-11-20
66折: $ 660 
 
金石堂 - 暢銷排行榜
危險便利商店6完
作者:gusao(945)
出版社:平心出版(欣燦連)
出版日期:2025-01-23
$ 300 
Taaze 讀冊生活 - 暢銷排行榜
別對每件事都有反應【2025限量暢銷特典版】:淡泊一點也無妨,活出快意人生的99個禪練習!
作者:枡野俊明
出版社:悅知文化
出版日期:2024-12-18
$ 260 
金石堂 - 暢銷排行榜
國中康軒新挑戰學習自修國文一下{113學年}
作者:康軒編輯
出版社:康軒文教事業股份有限公司
出版日期:2025-01-20
$ 402 
金石堂 - 暢銷排行榜
危險便利商店5
作者:gusao(945)
出版社:平心出版(欣燦連)
出版日期:2025-01-23
$ 300 
 
博客來 - 新書排行榜
失控的焦慮世代:手機餵養的世代,如何面對心理疾病的瘟疫
作者:強納森.海德特 (Jonathan Haidt)
出版社:網路與書出版
出版日期:2024-11-29
$ 379 
Taaze 讀冊生活 - 新書排行榜
小可憐成了大財閥的心頭好(2)
作者:清漪
出版社:北京億森同創文化
出版日期:2025-01-17
$ 59 
金石堂 - 新書排行榜
再見了,過去的我:本屋大賞得主、暖淚系作家小川糸滋潤心脾之作。首刷附贈{小川糸印刷簽名扉頁}
作者:小川糸
出版社:皇冠文化出版有限公司
出版日期:2025-01-17
$ 284 
博客來 - 新書排行榜
青春之箱 17 (首刷限定版)
作者:三浦糀
出版社:東立
出版日期:2025-01-23
$ 187 
 

©2025 FindBook.com.tw -  購物比價  找書網  找車網  服務條款  隱私權政策