購物比價 | 找書網 | 找車網 |
FindBook |
|
有 1 項符合
Andhazdhi的圖書 |
![]() |
$ 60 電子書 | கிளியோபாட்ரா
作者:Varshini Tripura 出版社:Andhazdhi 出版日期:2017-10-05 語言:英文 ![]() ![]() |
|
ஒவ்வொரு முறை எகிப்தையோ, பாரோக்களையோ, பிரமிடுகளையோ அல்லது அதனுடைய புராதன சின்னங்களையோ கடக்கும் பொழுது ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த வரலாற்றின் மீது…
அந்த ஈர்ப்பானது காலப்போக்கில் அதிகரித்துக் காதலாக மாற தொடங்கிய போது , தான் படிக்க துவங்கினேன் எகிப்தின் வரலாற்றை…
கிட்டதட்ட ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு எகிப்தை ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட நார்மரில் துவங்கும் எகிப்து வரலாறானது, கிட்டதட்ட முப்பத்து ஒன்று அரச வம்சங்களைக் கடந்து இறுதியில் கிரேக்க மாசிடோனிய வம்சமான தாலமி வம்சத்துடன் நிறைவடைகிறது.
அந்த தாலமி வம்சத்தில் கடைசி பாரோ நமது கதாநாயகி கிளியோபாட்ரா. அவளுக்கு பிறகு எகிப்து, பாரோக்களின் கையில் இருந்து, அதன் சுயத்தை இழந்து ரோமானியர்களின் கீழ் சென்று விடுகிறது. கடைசிவரை தனது நாடு ரோமின் கீழ் சென்று விடக் கூடாது என்று போராடியவள் கிளியோபாட்ரா.
எந்த நிலையிலும் தான் மகாராணி என்ற கர்வத்தை விட்டுக் கொடுக்காதவள் நமது கதாநாயகி…
கிட்டதட்ட ஏழு மொழிகளில் புலமை பெற்றவள். அலெக்ஸாண்டிரியாவின் மிகப் பெரிய நூலகம் அவளுக்கு மருத்துவம், பௌதிகம் கலை, கணிதம், வானவில், இலக்கியம் ஆகியவற்றின் மீது மிகப் பெரிய ஆளுமையைக் கொடுத்திருந்தது.
ஆக்டிமில் ஆக்டோவியனுக்கு எதிராகக் கடைசிக்கட்ட போரின் போது போர்க்களத்தில் ஆண்டனிக்கு இணையாக நின்று கடற்படையை வழி நடத்தியவள் கிளியோபாட்ரா…
அவளது வம்சமான தாலமி வம்ச மன்னர்கள் எல்லாம் தங்களை கிரேக்கர்கள் என்றும் அலெக்ஸாண்டர் வழி வந்த வம்சம் என்று சொல்லி பெருமை கொண்ட பொழுது,தான் எகிப்தின் பாரோ கிளியோபாட்ரா என்று தனது ஒவ்வொரு செயலிலும் ஆணிதரமாக சொன்னவள் அவள் …
இசிஸ் என்ற எகிப்திய பெண் தெய்வத்தின் அம்சமாகவே தன்னை கருதிக்கொண்டவள். அவளுடைய பேச்சாற்றலும், ஆளுமையும்,தைரியமும், கர்வமும், துணிச்சலும், துவளாத தன்மையும் தான் என்னை அவள் பக்கம் இழுத்துச் சென்றது.
அவள் தாலமி XIII ஆதரவாளர்களால் விரட்டப்பட்டு சிரியாவில் நாடு இழந்து அலைந்த பொழுது, சீசரை சந்திக்கத் துணிவுடன் தரை விரிப்பிற்குள் மூச்சடக்கி மறைந்து வந்து, மறுபடி மகாராணி ஆன செய்கையானது… அவளுடைய துணிவையும், எந்த நேரத்திலும் வாழ்க்கை முடிந்து விடாது, நம்பிக்கை இருந்தால்… என்ற பெரும் பாடத்தையும் நமக்குச் சொல்கிறது.
சீசரின் மகன் சிசேரியனுடன், ரோம் நகர வீதியில் கம்பீரமாக அவள் நடந்த பொழுது… அவளைப் பார்த்து ரோம் செனட் பயந்து தான் போனது.
ரோம் எகிப்தின் கட்டுப்பாட்டிற்குள் போய் விடுமோ என்று.
அந்த மாதிரியான கம்பீரம் கிளியோபாட்ரா…
பயந்த ரோம் செனட் அவளைத் தவறாக சித்தரித்துக் கொண்டு இருந்த போது, சீஸர் அவளுடைய சிலையை, இசிஸ் அம்சமாக, மிகவும் புனிதமான வீனஸ் கோயிலில் வைத்தது சொல்லுகிறது அவளுடைய மதிப்பை...
|