購物比價找書網找車網
FindBook
排序:
 
 有 1 項符合

Varshini Tripura

的圖書
கிளியோபாட்ரா
$ 60
    電子書
கிளியோபாட்ரா
作者:Varshini Tripura 
出版社:Andhazdhi
出版日期:2017-10-05
語言:英文   
樂天KOBO 樂天KOBO - 歷史文學  - 來源網頁  
圖書介紹看圖書介紹
圖書介紹 - 資料來源:樂天KOBO   評分:
圖書名稱:கிளியோபாட்ரா

ஒவ்வொரு முறை எகிப்தையோ, பாரோக்களையோ, பிரமிடுகளையோ அல்லது அதனுடைய புராதன சின்னங்களையோ கடக்கும் பொழுது ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த வரலாற்றின் மீது… 

 

அந்த ஈர்ப்பானது காலப்போக்கில் அதிகரித்துக் காதலாக மாற தொடங்கிய போது , தான் படிக்க துவங்கினேன் எகிப்தின் வரலாற்றை… 

கிட்டதட்ட ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு எகிப்தை ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட நார்மரில் துவங்கும் எகிப்து வரலாறானது, கிட்டதட்ட முப்பத்து ஒன்று அரச வம்சங்களைக் கடந்து இறுதியில் கிரேக்க மாசிடோனிய வம்சமான தாலமி வம்சத்துடன் நிறைவடைகிறது. 

 

அந்த தாலமி வம்சத்தில் கடைசி பாரோ நமது கதாநாயகி கிளியோபாட்ரா. அவளுக்கு பிறகு எகிப்து, பாரோக்களின் கையில் இருந்து, அதன் சுயத்தை இழந்து ரோமானியர்களின் கீழ் சென்று விடுகிறது.  கடைசிவரை தனது நாடு ரோமின் கீழ் சென்று விடக் கூடாது என்று போராடியவள் கிளியோபாட்ரா.

 

எந்த நிலையிலும் தான் மகாராணி என்ற கர்வத்தை விட்டுக் கொடுக்காதவள் நமது கதாநாயகி… 

 

கிட்டதட்ட ஏழு மொழிகளில் புலமை பெற்றவள். அலெக்ஸாண்டிரியாவின் மிகப் பெரிய நூலகம் அவளுக்கு மருத்துவம், பௌதிகம் கலை, கணிதம், வானவில், இலக்கியம் ஆகியவற்றின் மீது மிகப் பெரிய ஆளுமையைக் கொடுத்திருந்தது. 

 

ஆக்டிமில் ஆக்டோவியனுக்கு எதிராகக் கடைசிக்கட்ட போரின் போது போர்க்களத்தில் ஆண்டனிக்கு இணையாக நின்று கடற்படையை வழி நடத்தியவள் கிளியோபாட்ரா… 

 

அவளது வம்சமான தாலமி வம்ச மன்னர்கள் எல்லாம் தங்களை கிரேக்கர்கள் என்றும் அலெக்ஸாண்டர் வழி வந்த வம்சம் என்று சொல்லி பெருமை கொண்ட பொழுது,தான் எகிப்தின் பாரோ கிளியோபாட்ரா என்று தனது ஒவ்வொரு செயலிலும் ஆணிதரமாக சொன்னவள் அவள்  …

 

இசிஸ் என்ற எகிப்திய பெண் தெய்வத்தின் அம்சமாகவே தன்னை கருதிக்கொண்டவள். அவளுடைய பேச்சாற்றலும், ஆளுமையும்,தைரியமும், கர்வமும், துணிச்சலும், துவளாத தன்மையும் தான் என்னை அவள் பக்கம் இழுத்துச் சென்றது. 

 

அவள் தாலமி XIII ஆதரவாளர்களால் விரட்டப்பட்டு சிரியாவில் நாடு இழந்து அலைந்த பொழுது, சீசரை சந்திக்கத் துணிவுடன் தரை விரிப்பிற்குள் மூச்சடக்கி மறைந்து வந்து, மறுபடி மகாராணி ஆன செய்கையானது… அவளுடைய துணிவையும், எந்த நேரத்திலும் வாழ்க்கை முடிந்து விடாது, நம்பிக்கை இருந்தால்… என்ற பெரும் பாடத்தையும்  நமக்குச் சொல்கிறது. 

சீசரின் மகன் சிசேரியனுடன், ரோம் நகர வீதியில் கம்பீரமாக அவள் நடந்த பொழுது… அவளைப் பார்த்து ரோம் செனட் பயந்து தான் போனது. 

ரோம் எகிப்தின் கட்டுப்பாட்டிற்குள் போய் விடுமோ என்று. 

அந்த மாதிரியான கம்பீரம் கிளியோபாட்ரா… 

 

பயந்த ரோம் செனட் அவளைத் தவறாக சித்தரித்துக் கொண்டு இருந்த போது, சீஸர் அவளுடைய சிலையை, இசிஸ் அம்சமாக, மிகவும் புனிதமான வீனஸ் கோயிலில் வைத்தது சொல்லுகிறது அவளுடைய மதிப்பை... 

贊助商廣告
 
城邦讀書花園 - 今日66折
溫度的正義:全球沸騰時代該如何消弭升溫所造成的各種不公?
出版日期:1900-01-01
66折: $ 284 
金石堂 - 今日66折
倖存之家
作者:安.派契特
出版社:寂寞出版社
出版日期:2022-01-01
66折: $ 317 
金石堂 - 今日66折
守密:祕密心理學的第一本書!那些藏著不說的,如何影響你的健康與未來
作者:麥可.史萊平恩
出版社:究竟出版社股份有限公司
出版日期:2022-10-01
66折: $ 244 
金石堂 - 今日66折
詛咒兔子
作者:鄭寶拉
出版社:寂寞出版社
出版日期:2022-10-01
66折: $ 290 
 
金石堂 - 暢銷排行榜
BLUE LOCK藍色監獄-EPISODE 凪- (首刷限定版) 05
作者:金城宗幸/三宮宏太/ノ村優介
出版社:東立出版社
出版日期:2024-12-27
$ 170 
金石堂 - 暢銷排行榜
世界上最透明的故事(日本出版界話題作,只有紙本書可以體驗的感動)
作者:杉井光
出版社:皇冠文化出版有限公司
出版日期:2024-09-30
$ 284 
博客來 - 暢銷排行榜
真誠Be real, not perfect:從菜鳥助理到跨國企業CEO,關於職場、關係與人生的啟發
作者:楊佳燊 (Jason Yang)
出版社:商周出版
出版日期:2024-12-26
$ 316 
Taaze 讀冊生活 - 暢銷排行榜
Fountain新活水:Our Team, Our Taiwan! 2024世界棒球12強賽冠軍專刊
出版社:中華文化總會
出版日期:2025-01-08
$ 270 
 
博客來 - 新書排行榜
張忠謀自傳全集(上下冊)
作者:張忠謀
出版社:天下文化
出版日期:2024-11-29
$ 869 
Taaze 讀冊生活 - 新書排行榜
飲月少女:紐伯瑞金獎、美國圖書館協會Booklist年度最佳青少年讀物
作者:凱莉.龐希爾
出版社:野人文化
出版日期:2025-01-02
$ 315 
金石堂 - 新書排行榜
里程數(全)
作者:阿盧EPC
出版社:台灣角川股份有限公司
出版日期:2025-01-09
$ 205 
金石堂 - 新書排行榜
親吻黎明之花(01)
作者:もちゃろ
出版社:青文出版社股份有限公司
出版日期:2025-01-09
$ 111 
 

©2025 FindBook.com.tw -  購物比價  找書網  找車網  服務條款  隱私權政策